திரு. இராஜநாயகம் பாரதி
(சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்)
தோற்றம்: 06 செப்டம்பர் 1962 - மறைவு: 09 பெப்ரவரி 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பையும் திருநெல்வேலியையும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜநாயகம் பாரதி 09-02-2025 அன்று திருநெல்வேலியில் அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் (பிரபல கணித ஆசிரியர்) - சிவயோகம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை (வடமராட்சி விவாக பதிவாளர்) - தனலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தேவகி அவர்களின் அன்புக்கணவரும்,
பார்த்தீபனின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரதன், சுரபி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
ப.விநோதினி, க.சிவராசா, சுகந்தி, கௌரி, காலஞ்சென்ற நளினி, பரன், பாமதி, சபேசன், பத்மநிதி, சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக 105/1 பலாலி வீதியில் அன்னாரது இல்லத்தில் 13-02-2025 வியாழக்கிழமை வரை வைக்கப்பட்டு, வியாழன் அன்று காலை 9:00 மணியளவில் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
