திரு. இராசரெத்தினம் ராஜ்குமார்

(அலுவலக உதவியாளர் - யாழ் பல்கலைக்கழகம்)

இராசரெத்தினம் ராஜ்குமார்

தோற்றம்: 28 பெப்ரவரி 1977 - மறைவு: 02 ஜூன் 2025

யாழ். தொல்புரம் மத்தி சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், இல-126, 2ம் குறுக்குதெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரெத்தினம் ராஜ்குமார் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், இராசரெத்தினம் - புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், சண்முகலிங்கம் - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

பத்மா (ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜதுசாந் (தரம்-12 சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன்), பவித்தரா (தரம்-10. யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சனா, ரவீனா, ரசிதா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,  திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2025 04:00)