திருமதி. இராமநாதன் மனோன்மணி அம்மா
மறைவு: 02 மார்ச் 2025
நீர்கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமநாதன் மனோன்மனி அம்மா அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர் (முன்னாள் ஆசிரியை), முத்துக்குமார், குழந்தை வேல் ரமணி, வைரவநாதன்,
நாகராஜன் ஆகியோரின் தாயாரும்,
ஜெகநாதன் (சாமி மாஸ்டர் - முன்னாள் ஆசிரியர்), செல்வமணி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,
ரம்யசபரிஷா, யசோதரா - நிரோஷன், தக்ஷா, திதுஷா, அஞ்சலி, ஹரிஹரன், சுகந்தன், லக்ஷித்ராம், அபிராம் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் No- 4, பள்ளிவாசல் (Mosqu Lane) காமாட்சோடை, நீர்கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
