திரு. ரெங்கசாமி ராசலிங்கம்

(முன்னாள் Hyder Jewellers பங்காளர்)

ரெங்கசாமி ராசலிங்கம்

மறைவு: 21 ஏப்ரல் 2026

கண்டியை பிறப்பிடமாகவும், இல- 727/1, அளுத்மாவத்தை ரோட், கொழும்பு-15 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு.ரெங்கசாமி ராசலிங்கம் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரெங்கசாமி - மீனாட்சியம்மாள் தம்பதியினரின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற கோவிந்தசாமி - ஜோதியம்மாள் (இந்தியா) தம்பதியினரின் மருமகனும்,

புஸ்பகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

ரெங்கநாதன் (கனடா), மஞ்சுளா (கொழும்பு), குமுதினி (கொழும்பு). வித்யா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷகீலா (கீதா), சத்தியானந்தன், ஸ்ரீகந்தராஜா (பாட - Amber Textile) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிரிஜேஸ்வர், மருதுளா, ரிதிஸ், லஷ்வினி, ஷாயினி, ஹர்ஷாயினி, அரண், டிலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-04-2026 புதன்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் அன்னாரது அளுத்மாவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-04-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2026 00:00)