திருமதி. இரஞ்சினி குலசேகரன்
மறைவு: 10 ஜூலை 2025
யாழ்.கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இல- 41, டச்சு வீதி கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சினி குலசேகரன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், கந்தப்பு - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரியும்,
சிவராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
குலசேகரன் (ஓய்வு நிலை பிரதேச முகாமையாளர் - இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சினி (உதவி அதிபர் - யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி), சுபாசினி (ஆசிரியை - யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), யோகேந்தினி (உதவி அதிபர் - வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி), செல்வி. டனுஷினி (ஜனசக்தி காப்புறுதி நிறுவனம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணாகரன் (அதிபர் - யாழ். மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்), பரமேஸ்வரன் (ஆசிரியர் - யாழ். சென்மேரிஸ் வித்தியாலயம்), துளசிதன் (தாதிய உத்தியோகத்தர் - மந்திகை ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷரவணப்ரியன், நிஷோதா, பிரமோத், சகீர்த்தனன், தாரகன், ஹர்ஷியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
