திருமதி. இராசையா இரத்தினம்

இராசையா இரத்தினம்

தோற்றம்: 10 ஏப்ரல் 1932 - மறைவு: 31 மார்ச் 2025

யாழ். வேலனை மெற்கு 7 வட்டாரத்தை (வேலனை மத்திய கல்லூரி அருகாமையில்) சேர்ந்தவரும், இல-376, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா இரத்தினம் அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை இரவு இறைவனடி சேந்தார்.

அன்னார், காலம்சென்றவர்களான செல்லப்பா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதிகயினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலம்சென்றவர்களான இராசம்மா, சிவபாக்கியம், ஐயாத்துரை ஆகியோரின் சகோதரியும்,

காலம்சென்றவர்களான சிவபாக்கியம், சிவயோகம். அன்னலட்சுமி மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2025 04:00)