திருமதி. இராசகுலசிங்கம் அன்னபூரணம்

இராசகுலசிங்கம் அன்னபூரணம்

மறைவு: 06 ஜூலை 2025

வவுனியா வடக்கு குளவிசு, நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தற்போது நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசகுலசிங்கம் அன்னபூரணம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் இளையமகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை - பார்வதிப்பிள்ளைதம்பதிகயினரின் மருமகளும்,

இராசகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்துமதி (ஆசிரியை - நெளுக்குளம் கலைமகள் ம.வி), வனிதாமதி (இதழ் ஒலி ஓளி ஊடகம் - அமெரிக்கா), சுரேஸ்குமார் (சுவிஸ்), ரமேஸ்குமார் (ஆசிரியர்), விஜிதாமதி (முன்னாள் தாதிய உத்தியோகத்தர் - மந்திகை ஆதார வைத்தியசாலை யாழ்ப்பாணம், கனடா), காலஞ்சென்ற தினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நேமிநாதன் (ஆசிரியர்), வரதராஜா (மருத்துவர் - அமெரிக்கா), யசோதா (சுவிஸ்), துர்மலா (ஆசிரியை), சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறேகா, நிவேகா, டனுஸ்கா, கம்சிகன், கம்சிகா, கன்னிகா, வர்ணிகா, விதுரன், ரவினன், நர்த்தனன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது மகளின் இல்லத்தில் (நெளுக்குளம் பிரதேசசபை முன்பாக) நடைபெற்று, திருவுடல் குளவிசுட்டான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2025 04:00)