Mrs. Rathakrishnamoorhy Kugamalar
(ஓய்வுநிலை உத்தியோகத்தர் - அச்சுவேலி ப.நோ.கூ சங்கம்)
Date of Birth: 30 January 1963 - Deceased: 30 November 2025
யாழ். இடைக்காட்டை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராதகிருஸ்ணமூர்த்தி குகமலர் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை - குழந்தையார் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - கதிராசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இராதகிருஸ்ணமூர்த்தி (ராதா - ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சௌமியா (இலண்டன்), சாருகன் (சாரு - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிராஜ், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நேஹாவின் பாசமிகு அம்மம்மாவும்,
குகநேசன் (கனடா), காலஞ்சென்ற குகநாதன், குகதாசன் (கனடா), குகப்பிரியா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசமூர்த்தி (இலங்கை), சிவமூர்த்தி (மூர்த்தி - கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரயு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆவரங்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்,
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
