திரு. ருத்திராஜா சுப்ரமணியம்

ருத்திராஜா சுப்ரமணியம்

தோற்றம்: 22 ஆகஸ்ட் 1932 - மறைவு: 27 மே 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், உடுவில் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் வசித்து, பின்னர் நியூ ஜெர்சியின் ஹில்ஸ்பரோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ருத்திரராஜா சுப்ரமணியம் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று நியூ ஜெர்சியின் ஹில்ஸ்பரோவில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை - சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, (அமெரிக்கா), சிவகாமி (இங்கிலாந்து), செந்தூரன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

அரவிந்தன் (அமெரிக்கா), கணேசன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரணா, அதவன், அச்சுதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சாவித்திரி அம்பிகாபதி, காலஞ்சென்றவரகளான சிவலோகமணி செல்லையா, ஸ்ரீதரன், Dr. ரஞ்சின் பாலகுமாரன் ஆகியோரின் அன்பான சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை Franklin Memorial Park (1800 NJ-27, North Brunswick Township, NJ 08902) என்ற முகவரியில பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 11:30 மணி வரை கிரியைகள் நடைபெறும்.

கிரியைகளை தொடர்ந்து The Brunswick Social Club (1090 Cozzens Lane, North Brunswick, NJ 08902) என்ற முகவரியில் மதிய போசணம் வழங்கப்படும்.

மலர்களுக்குப் பதிலாக, இலங்கைத் தமிழ் சங்கத்திற்கு நன்கொடைகள் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர். பெறப்படும் அனைத்து நன்கொடைகளும், அவர் பெரிதும் நேசித்த தாய்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஒரு சிறப்புத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும்.

**********************

 Mr. Ruthirarajah Subramanium was born in Sri Lanka (August 22th 1932), lived in Nallur, Uduvil, & Colombo Sri Lanka, and later moved to Hillsborough NJ. He passed away peacefully on May 27th, 2026 in Hillsborough, NJ.

He was the loving son of the [late] Kanakambikai Subramanium and the [late] Subramanium Ponnaiah.

He was the devoted husband of Arunthathy Ruthirarajah, and the beloved father of Abhiramy Aravinthan (USA), Sivagaamy Ganesan (UK), and Senthooran Ruthirarajah (UK).

He was the loving father-in-law of Aravinthan Rajendra (USA) and Aravinthan Ganesan (UK), and the doting grandfather of Aarana, Athavan, and Achuthan.

He was also an endearing brother to Savithiri Ambikapathy, [late] Sivalogamani Chelliah, [late] Sridharan Subramanium, and [late] Dr Ranjin Balakumaran.

Funeral services are scheduled for Tuesday June 2nd, 2026.

Viewing:- 9:00 AM to 10:00 AM

Rituals: 10:00 AM to 11:30 AM

Location:- Franklin Memorial Park, 1800 NJ-27, North Brunswick Township, NJ 08902

The service will be followed by a lunch at The Brunswick Social Club, 1090 Cozzens Lane, North Brunswick, NJ 08902.

In lieu of flowers, the family honors his memory by requesting donations to the Ilankai Tamil Sangam. All gifts will go toward a special project in his cherished homeland.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)