டாக்டர். சக்திவடிவேல் சக்திபாலன்
(மாவட்ட இணைப்பாளர் உளநலம்- Mental Health, தொற்றா நோயியல்- NCD, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- மன்னார்)
தோற்றம்: 25 பெப்ரவரி 1981 - மறைவு: 06 அக்டோபர் 2021
யாழ். தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் நானாட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட சக்திவடிவேல் சக்திபாலன் அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சக்திவடிவேல் (வடிவேல் வோச் வேக்ஸ், யாழ்ப்பாணம்) திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற விவேகானந்தன் (இளைப்பாறிய மக்கள் வங்கி முகாமையாளர், மன்னார்) சிறீஜெயதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துவாரகா (ஆசிரியர், மன்/முருங்கன் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சக்திகா, சக்திபிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதா (கனடா), யானு (லண்டன்), லோஜினி (பிரதி முகாமையாளர், மக்கள் வங்கி, ஊர்காவற்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிதரன் (கனடா), ஜெயசீலன் (லண்டன்), தவக்குமார் (அபி விருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சங்கானை), Dr. முரளி(பொது மாவட்ட வைத்தியசாலை திருகோணமலை), Dr. வசீகரி (பொது மாவட்ட வைத்திய சாலை திருகோணமலை) ஆகியோரின் மைத்துனரும்,
ஹரில், ஆகாஷ், அபிலாஷ், ஹரித், அக்ஷயா, திவ்யன், கபிஷா, அக்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நானாட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
