திருமதி சரஸ்வதி மயில்வாகனம்

சரஸ்வதி மயில்வாகனம்

தோற்றம்: 21 அக்டோபர் 1944 - மறைவு: 24 ஜூன் 2025

யாழ். கரவெட்டி கலட்டினயம் கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  சரஸ்வதி மயில்வாகனம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைத்தியர் முருகேசபிள்ளை (கல்முனை), சிவராசா, அன்னலஷ்மி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான  குகதாசன் (முன்னாள் அபதிபர் - யாழ். இந்துக் கல்லூரி), புஷ்பாஞ்சலி மற்றும் பாலாம்பிகை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 26-06-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2025 21:21)