திருமதி. சாரதாதேவி சிவசம்பு
தோற்றம்: 29 ஆகஸ்ட் 1942 - மறைவு: 05 ஜனவரி 2022
யாழ்.மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் கொண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாரதாதேவி சிவசம்பு அவர்கள் 05-01-2022ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற அகிலேசர் சிவசம்புவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கம்மாவின் அன்புப் புதல்வியும்,
துஷ்யந்தன், துஷ்யந்தி (லண்டன்), தனஞ்சயன் (சுங்கு, ஆசிரியர் கொழும்பு இராமகிருஷ்ண வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
மணிவண்ணன் (லண்டன்), பிருந்தா (ஆசிரியை கொழும்பு சைவமங்கையர் கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரணவன், சஞ்சிதன் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகநாதன், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மயிலுப்பிள்ளை மற்றும் விமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 09-01-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
