திருமதி. சர்வஜீவதயாபரி பாஸ்கரன் (சர்வா Teacher)

(தமிழ்பாட ஓய்வு நிலை ஆசிரியை - யூனியன் கல்லூரி, பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி)

சர்வஜீவதயாபரி பாஸ்கரன் (சர்வா Teacher)

தோற்றம்: 25 மே 1955 - மறைவு: 17 செப்டம்பர் 2025

யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திருமதி. சர்வஜீவதயாபரி பாஸ்கரன் அவர்கள் தனது 70வது வயதில் 17-09-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறையடி இணைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சக்கரப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,

திரு.திருமதி நடராசா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன் (கார்க்கோ நிறுவனப் பணிப்பாளர் - நிதி) அவர்களின் இல்லத்தரசியும்,

சிவானந்தராசா (சண்டிலிப்பாய் கல்விக் கோட்ட ஓய்வுநிலைப் பணிப்பாளர்), தயானந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), கிருபானந்தன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- வலிகாமம்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

சாந்தராசா (புகையிரதத் தலைமைப் பாதுகாவலர் - ஓய்வு நிலை), பிறேமாவதி கனகலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் 19-09-2025 சனிக்கிழமை அன்று  நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2025 04:00)