திருமதி. சதாசிவம் பிள்ளை பாப்பு அம்மாள்
தோற்றம்: 17 நவம்பர் 1946 - மறைவு: 25 மே 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் நடுவலூர் கிராமம் ஆலத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம் (கம்பளை) அவர்களின் மனைவி திருமதி. பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சி.த. தேவராயம்பிள்ளை (இரத்தினம்) - மீனாம்பாள் தம்பதியினரின் மகளும்,
சதீஷ் இராமச்சந்திரன் (ஆனந்ததாஸ்), சிவகுமார் (வீனஸ்), சித்ராதேவி, கலைச்செல்வி ஆகியோரின் தாயாரும்,
மகேந்திரன் (ஹப்புத்தளை), பிரகலாதன் (சென்னை), சுதர்ஷினி (சுதா), சங்கீதா ஆகியோரின் மாமியாரும்,
ஜெயலக்ஷ்மி (திருச்சி), சுப்பையா சுரேஷ் (கொழும்பு), சர்வேஸ்வரன் (நடுவலூர்), ஜெயந்தி (மணிகண்டம் - திருச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னுசாமிபிள்ளை - சுலோட்சனா (ஹப்புத்தளை), காலஞ்சென்றவர்களான கருப்பையாபிள்ளை - செல்லம்மாள் (வடமலப்பட்டி), காலஞ்சென்ற சாம்பசிவம்பிள்ளை - மாணிக்கம் (கலஹா), சதாசிவம்பிள்ளை - விஜயலக்ஷ்மி (ஓமலூர்) ஆகியோரின் சம்பந்தியும்,
துளசி, திவ்யலக்ஷ்மி, ஆதித்தன், கோமதி, கோகுல் ஆகியோரின் அம்மாயியும்,
ஷிவானிகா, ஹருணிகா, தாருணிகா ஆகியோரின் அப்பாயியும்,
அனன்யா, தான்யா, ஆதேவ் த்ருவ் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை காலை முதல் (இல-15/105, ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:15 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
