திருமதி. சண்முகதாசன் மனோன்மணி
மறைவு: 02 அக்டோபர் 2025
யாழ். சரசாலை மத்தி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அராலி தெற்கு, வட்டுக்கோட்டையினைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகதாசன் மனோன்மணி அவர்கள் 02-10-2025 இன்று அராலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (சோமு) - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
கைலாயபிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சண்முகதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன் (அஞ்சலகம்-சாவகச்சேரி), ஆரூரன் (பிரதேச செயலகம்-சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புனிதா (பிரதேச செயலகம்-சாவகச்சேரி), நீரஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனோஜன், அனுராகன், அனுஸோபன், அனுஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று 2.00 மணியளவில் அராலியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அராலி பூனாவடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
