திரு. சின்னையா கமலநாதன்
(ஓய்வுபெற்ற பொது சுகாதார வௌிக்கள உத்தியோகத்தர்)
தோற்றம்: 13 ஆகஸ்ட் 1946 - மறைவு: 25 மே 2024
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா கமலநாதன் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி சின்னையா-தங்கலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
செல்வகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரேம்நாத் (தாதிய உத்தியோகத்தர், பொது வைத்தியசாலை-திருகோணமலை), பிரதீப் (உதவிப் பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கி - மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷினி (தாதிய உத்தியோகத்தர், பொது வைத்தியசாலை-திருகோணமலை), ஜெயதர்சினி (பிரதி முகாமையாளர், மக்கள் வங்கி-வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிஷன், ஜதுஷன், ஷருக்ஷன், யுகேஷ், பிருந்தேஷ், யதீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பத்மாவதி, காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், அஞ்சனா தேவி, சிவலிங்கம், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இல-25A, 6ஆம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவில் அவரது இல்லத்தில் புகழுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-05-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
