திரு. சின்னத்தம்பி பரஞ்சோதி
(சோதி ஸ்ரூடியோ - உரிமையாளர், மல்லாகம், தெல்லிப்பளை, குப்பிளான்)
தோற்றம்: 05 ஜூன் 1963 - மறைவு: 12 டிசம்பர் 2024
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி பரஞ்சோதி அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தருமலிங்கம் - பொன்மணி தம்பதியினரின் மருமகனும்,
கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுயந்தன் (சோதி ஸ்ரூடியோ), சுகிதா, தர்சிகா (விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் - யா / புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, அச்சுவேலி), அனிதா (ஆசிரியை - யா / திருக்குடும்ப கன்னியர்மடம் தேசிய பாடசாலை), காலஞ்சென்ற நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டினேகா, தயாபரன் (களஞ்சியகாப்பாளர் - கார்கில்ஸ் நிறுவனம், கிளிநொச்சி), விஜயானந்தம் (பிரான்ஸ்), சாரங்கன் (மின்சாரசபை தொழில்நுட்ப உதவியாளர் - சுன்னாகம்) ஆகியோரின் மாமனாரும்,
தனுசியன், யஸ்மிகா, ஹரிஸ்மன், ஆருசி, அதிசா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-12-2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
