திரு. சின்னத்தம்பி சிற்றம்பலம்

(யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்.)

சின்னத்தம்பி சிற்றம்பலம்

தோற்றம்: 06 பெப்ரவரி 1934 - மறைவு: 11 ஜூன் 2026

யாழ் நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், Nigeria Kaduna, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற தம்பிமுத்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
வியாசன் (ராஜூ- ஐக்கிய அமெரிக்கா), வாசுகி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ரீமா அவர்களின் அன்பு மாமனாரும்,
 
மோகன், வித்யா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
 
காலஞ்சென்ற செல்லம்மா , பாக்கியம், சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னையா , சிவபிரான், புவனேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!



தமிழ்த் தேசியத்தை ஆழமாகவும்,  தூய்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் நேசித்த சமூகத் தலைவர் திரு. சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் அவர்கள்  யூன் 11, 2026ம் திகதி வியாழக்கிழமை ரொறன்ரோ ஸ்காபரோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

தமிழர் சமூகத்தில் "மாஸ்ரர்" என அன்போடு அழைக்கப்பட்ட அவர் தாயகத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் அர்பணித்த வாழ்வின் ஒளிக்கோப்பையாக விளங்கினார்.

யாழ் நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 11-06-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராக பணிபுரிந்த சின்னத்தம்பி சிற்றம்பலம்  ஆசிரியர் அவர்கள் எண்பதுகளின் இறுதியில் கனடா வந்திருந்தாலும் தாயகத்தின் மீதான அவரது பற்றும் பாசமும் ஒருபோதும் குறையிவில்லை.

தாயகச் சிநதனையுடன் தேசியப் போராட்டத்தின் மீதான ஆழ்ந்த அக்கறையுடனும், வாழ்ந்த அவர் தமிழ்த் தேசியத்தின் வரலாறு, தியாகம், நோக்கம் ஆகியவற்றைப் பற்றியே எப்போதும் உரையாடுவார்.

சிறந்த பேச்சாளராகவும், நேர்மையான சமூகப் பணியாராகவும், அவர் பெற்றிருந்த மரியாதை, தமிழர் சமூகத்தில் அவருக்கு உயர்ந்த பொறுப்புகளை தானாகவே  தேடித்தந்தது.

தமிழ் கூட்டுறவு இல்லத்தில் ஒருங்கிணைப்பாளர், தமிழீழச் சங்கத்தின் தலைவர், உலகத்தமிழர் இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு சமூகஅமைபபுகளில் அவர் ஏற்ற பொறுப்புகள், அவரது அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும், வெளிப்படுத்துகின்றன. எந்தப் பொறுப்பையும், அவர் மனதார ஏற்று சமூக நலனுக்காக  முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

அவரது தூய்மையான உழைப்பையும், தமிழ்த் தேசியத்திற்கான அவரது உண்மையையும் கௌரவிக்கும் வகையில் கனடியத் தமிழர் தேசிய அவை உட்பட பல்வேறு சமூக அமைப்புகள் அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த  பங்களிப்புகள் கனடா வாழ் தமிழர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழத் தேசியத்தை உயிராகக் கொண்டிருந்த இந்த மாமனிதரின் மறைவு கனடா தமிழர் சமூகத்திற்கு பெரும் இழப்பாகும்.

சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் அவர்களுக்கு கனடா உழகத்தமிழர் பத்திரிகை கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவரது குதும்பத்தினருக்கும் உறவவினர்களுக்கும் 
ங்கள் ஆழ்ந்த இரங்களை உரித்தாக்குகிறோம்
கனடா உலகத்தமிழர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2026 20:00)