திரு. சின்னத்துரை விமலதாசன்
தோற்றம்: 26 மே 1959 - மறைவு: 02 மார்ச் 2025
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பாரிஸ்-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விமலதாசன் அவர்கள் 02-03-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சினைத்துரை - மகேஸ்வரி தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரமணிக்கா அவர்களின் அன்பு கணவரும்,
நிலோசன், நிகாஷன், ஆகிமோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகதாசன் (பிரான்ஸ்), நிலோஜனா (பிரான்ஸ்), சுலோஜனா (அவுஸ்திரேலியா), அனோஜனா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:30 - 5:00 மணி வரை Funerarium de Paris (21, Bd du bois le Prêtre 75017 Paris) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-03-2025 புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் (55, rue des Rondeaux 75020 Paris) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
