திரு சிவகுருநாதன் இரங்கராஜா
(முன்னாள் வடக்கு,கிழக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர்)
தோற்றம்: 02 பெப்ரவரி 1949 - மறைவு: 15 ஜூன் 2020
பொன்னாலையை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில்வசித்து வந்தவருமான சிவகுருநாதன்
இரங்கராஜா 15-06-2020ம் திகதி திங்கட்கிழமை மாலை அன்று கொழும்பில்இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிவகுருநாதன் ரோகினி அம்மா தம்பதியரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,
செம்மணச்செல்வியின் பாசமிகு கணவரும்,
K P Sவரதராஜா(ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி),பாக்கியலட்சுமி,சௌந்தரராஜா(Bahrain),
விஜயலட்சுமி,ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற சம்பந்தன்,மற்றும் திருநாவுக்கரசன்,ஆரூரன்,வாதவூரன்,சுந்தரமூர்த்தி,கலைமகள் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 16-06-2020ம் திகதி செய்வாய்க்கிழமை
62,விவேகானந்தமேடு,கொட்டகேனா,கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சகோதரன்-K P S வரதராஜா
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி
+94 77 026 9992,+ 94 77 386 8562
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2020 13:43)
