திருமதி. சிவமணி சோமசுந்தரம்
தோற்றம்: 27 மே 1933 - மறைவு: 15 ஜூன் 2025
யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமணி சோமசுந்தரம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - பார்வதி (நெல்லுகார சங்கரப்பிள்ளை) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி - ராணியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் (மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியபிரபா, சூரியகாந்தன் (மட்டக்களப்பு), சூரியகலா, சுதாகரன், சுபோசன் (கனடா), காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சுதர்சன், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, Ontario) இல் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium located at 2 (Stalwart Industrial Drive, Gormley, ON) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
