திருமதி. சிவராசா உதயலட்சுமி
தோற்றம்: 16 நவம்பர் 1946 - மறைவு: 26 டிசம்பர் 2025
யாழ். கோப்பாய் மத்தி அம்பிளானைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா உதயலட்சுமி அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா - அன்னம்மா தம்பதியினரின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற நடராசா - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவராசா (சின்னத்தம்பி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மதிவதனி, காலஞ்சென்ற சந்திராதேவி, பாலஜோகினி, ஸ்ரீகாந்த், ஸ்ரீகுமார் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சண்முகேஸ், கௌரிஸ்சினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சியாமளன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், தெல்லிப்பளை) அன்பு மாமியாரும்,
நித்தியஸ்ரீயின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்ற அருளானந்தம் (பெரியதம்பி), நாகேஸ்வரி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
சிவதாசன், காலஞ்சென்ற குகதாசன், பத்மினி, இன்பகீதா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
