திரு. சிவசிதம்பரம் சந்திரன்

(இலங்கை போக்குவரத்து சபை, பிராந்திய விநியோக உத்தியோகத்தர் - வடமாகாணம்)

சிவசிதம்பரம் சந்திரன்

மறைவு: 28 பெப்ரவரி 2025

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் சந்திரன் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி அடைந்தார். 

அன்னார்,  காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தி (ஆசிரியை - வ/அல் இக்பால் மகா வித்தியாலயம்) அன்புக் கணவரும்,

லவன் (பல்கலை மாணவன்), தேனுகா (மாணவி), லோஜிகா (மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வவுனியா தட்சணாகுளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :- மனைவி, பிள்ளைகள்

முகவரி:-

30/6, கோவில் வீதி, குருமன்காடு, வவுனியா.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 05:00)