சிவஶ்ரீ. ஸ்ரீனிவாசக ஐயர் சிகிவாகனக் குருக்கள்

(தெஹிவளை மங்கள விநாயகர் ஆலய பிரதம குரு)

ஸ்ரீனிவாசக ஐயர் சிகிவாகனக் குருக்கள்

மறைவு: 27 மே 2025

யாழ். காரைநகரை  பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும்  கொண்ட சிவஸ்ரீ. ஸ்ரீனிவாசக ஐயர் சிகிவாகனக் குருக்கள் அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று தெஹிவளையில்  சிவபதம் அடைந்தார். 

அன்னார், பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீனிவாச வாகீசக் குருக்கள் அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணி முதல் களுபோவில பீரிஸ் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2025 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் திருவுடல் கொஹுவல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: -  சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2025 03:51)