திரு. செல்வரத்தினம் சரவணபவன்
தோற்றம்: 14 பெப்ரவரி 1965 - மறைவு: 19 ஆகஸ்ட் 2024
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், 168/6, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13 வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் சரவணபவன் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வே. செல்வரத்தினம்-தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்-செல்லமா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவமணி அவர்களின் கணவரும்,
சர்வானந்தன், கேமினி, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரது புகழுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பொரளை ஜெயரட்ண மலர்ச்சாவையில் 22-08-2024 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளைபொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
