திரு. சோதிலிங்கம் நிதுர்சன்

(யாழ் சென்ஜோன்ச் கல்லூரி- பழைய மாணவன்)

சோதிலிங்கம் நிதுர்சன்

தோற்றம்: 28 ஆகஸ்ட் 1996 - மறைவு: 24 நவம்பர் 2024

யாழ்.நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிலிங்கம் நிதுர்சன் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோதிலிங்கம்-கணேசமலர் (பவானி  ஆசிரியை-நீர்வேலி றோ.க.த.க பாடசாலை) தம்பதியினரின் அன்பு மகனும்,

நிசோபன் (HNDM), நிவேதன் (இரண்டாம் வருட மாணவன் - கொழும்பு பல்கலைக்கழகம்), நிவேதா (A/L மாணவி - கலைப்பிரிவு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து-அன்னலட்சுமி மற்றும் இராசையா-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற குணரத்தினம், நவரத்தினம், சிவலிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,

ரஞ்சிதமலர், புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, கருணைதாசன் (சுவிஸ்), கிருஸ்ணதாசன் (அப்பன்), சிவதாசன் (கனடா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகவரி:-

பருத்தித்துறை வீதி,

நீர்வேலி வடக்கு, நீர்வேலி.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2024 05:00)