திரு சுப்பிரமணியம் நவரத்தினம்(மணித்தம்பி)

சுப்பிரமணியம் நவரத்தினம்(மணித்தம்பி)

தோற்றம்: 01 ஜூலை 1947 - மறைவு: 24 செப்டம்பர் 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 308 கரும்புள்ளியான், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம் (மணித்தம்பி) அவர்கள் 24.09.2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
கலாஜினி (பிரித்தானியா), அருண(கனடா), கோபிகிருஷ்ணா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சந்திரசேகரன் (பிரித்தானியா), இராஜேஸ்வரி (கனடா), யோகரதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஞானேஸ்வரி, செல்வரத்தினம், கனகரத்தினம் மற்றும் காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சோமசுந்தரம்பிள்ளை, வேலாசிப்பிள்ளை, டில்லிராஜாபாலன், கோவிந்தன், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மிதுஷா, குசால், கிருஷ்ணா, துளசிகன், டிதுர்ஷன், நிரோஜன், அகிம்சன், சக்தி, ஆரியன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1.00 மணியளவில், அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
⸻
நினைவஞ்சலி :-
 
குடும்பத்தின் தூணாக நின்று, அன்பையும் நற்பண்புகளையும் வழங்கி, எங்களை வழிநடத்திய அன்னாரின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
நீங்கள் ஊட்டிய பாசமும், காட்டிய வழிகாட்டுதலும், பகிர்ந்த புன்னகையும் என்றும் எங்கள் நினைவை விட்டு அகலாது. புயல் வீசினாலும் சாயாத பெரு மரமாய் எங்களைக் காத்து, சுயநலமின்றி வாழ்ந்து காட்டிய உங்கள் தியாகத்திற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் அமைத்துத் தந்த நல்வழியில் நடப்பதே நாங்கள் உங்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
 
உங்கள் நினைவுகளும், நீங்கள் விதைத்த நல்விதைகளும் என்றும் எங்கள் இதயங்களில் நீங்காமல் நிறைந்து எங்களை வழிநடத்தும்.
> "எங்கள் வாழ்வின் ஒளியாய் இருந்து
> அன்பையும் அறத்தையும் கற்றுத்தந்தாய்...
> பாசப் பெருக்கையும் வழிகாட்டும் நெறியையும்
> வழங்கிச் சென்ற எங்கள் தெய்வமே!
> உன் உருவம் எங்கள் கண்முன்னே மறைந்தாலும்
> உன் நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சில் வாழும்!"
⸻
தொடர்புகளுக்கு
 
தகவல்: குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:

ராஜன் – மருமகன்: +94 777 967 265 / +44 795 155 3066
அருணா – மகள்:+1 647 819 7578 / +94 762 697 451
கோபி – மகன்: +1 416 347 6099 / +94 741 463 620
கலா – மகள்: +44 794 990 1133

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2026 18:13)