திரு. சுப்பிரமணியம் பாலசிங்கம்
(மைதிலி ஸ்ரோா்ஸ் உரிமையாளர்)
தோற்றம்: 09 ஜனவரி 1935 - மறைவு: 03 ஜூலை 2024
யாழ். தெல்லிப்பழை வர்த்தளைவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
இராஜகுமாரி அவர்களின் அன்புக்கணவரும்,
மைதிலி, சுபாஜினி, கௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரி, டெய்சி, ஆதவன், யாதவன், மாதேஷ், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
