திரு. கதிரேசு சுப்பிரமணியம் கணேசதாசன் (தாஸ்)
(உயிரியல் ஆசிரியர்- பம்பலபிட்டி இந்து கல்லூரி)
தோற்றம்: 15 ஜூலை 1958 - மறைவு: 10 ஜனவரி 2024
யாழ். அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கணேசதாசன் (தாஸ்) அவர்கள் இன்று 10-01-2024 ம் திகதி புதன்கிழமை இயற்கை எய்தினார்.
இவர் கொழும்பு முன்னாள் வெஸ்லிக் கல்லூரி, தர்கா நகர் சாகிரா கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி (பம்பலபிட்டி), மெதடிஸ் கல்லூரி (கொழும்பு) ஆகியவற்றில் கற்பித்த சிறந்த ஆசிரியரும், ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய பழைய மாணவரும் ஆவார்.
இவர் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - புவனேஸ்வரி (முன்னை நாள் ஆசிரியர்) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனும்,
பிரஷாந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,
சுகந்தினி நந்தகுமார், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்த நந்தகுமார், அஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயகிருஸ்ணன், ஹரிமுரளிகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மானாரும்
சிந்தன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-01-2024 ம் திகதி சனிக்கிழமை காலை 9:00 தொடக்கம் மாலை 5:00 வரை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-01-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்று 10:00 மணிக்கு பூதவுடல் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிர்வாகத்தினர்
"ஆவரங்கால் பிரித்தானியா பழைய மாணவர் சங்கம்."
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
