திரு. தாமேதரம்பிள்ளை சிவபாதசுந்தரம்
(ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்)
தோற்றம்: 08 பெப்ரவரி 1958 - மறைவு: 12 டிசம்பர் 2024
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், Epinay sur Seine - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை-இராஜலட்சுமிதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை -பரஞ்சோதி, நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீவன், சரண்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமணிதரன், சிவகெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவயோகேஸ்வரன் (யோகன்-பிரான்ஸ்), சிவகங்கை (கங்கா-பிரான்ஸ்), சிவறோஜினி (றோசா-இண்டன்), சிவசக்தி (சிவம்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
14-12-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை,
15-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை,
18-12-2024 புதன்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை, Funérarium des Joncherolles (95, rue Marcel Sembat 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-12-2024 வெள்ளிக்கிழமை காலை 8:45 மணி முதல் அஞ்சலியும், இறுதிக்கிரியையும் நடைபெற்று, நண்பகல் 12:15 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
