திருமதி தவநாயகி பாலசிஙகம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)
தோற்றம்: 09 பெப்ரவரி 1950 - மறைவு: 23 பெப்ரவரி 2020
காரைநகர் இந்துக்கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும்,தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் முன்னாள் செயலாளரும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப்பரீட்சை ஆணையாளரும்,திறந்த பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளரும்,
காரைநகர் இந்துக்கல்லூரியின் விலங்கியல் ஆசிரியராகவும்,பிரதி அதிபராகவும் பணியாற்றிய பின்னர் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டு காரைநகரின் இடம்பெயர்வின் பின்னர் பாடசாலையை மீளக்கட்டியெழுப்ப அரும் பணியாற்றியிருந்தவரும்,பழைய மாணவியும் ஆவார்.
மேலும்,இவர் வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலயத்தின் அதிபராகவும்,உதவிப் பரீட்சை ஆணையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
காரைநகரைச் பிறப்பிடமாகவும்,திக்கரை வீதி,களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து தற்போது வெள்ளவத்தை,கொழும்பில் வசித்து வந்தவருமான, விலங்கியல் பாட ஆசிரியருமான திருமதி தவநாயகி பாலசிங்கம்(தவநாயகி ரீச்சர்) அவர்கள் கொழும்பில் 23-02-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
www.tamilthakaval.org
