யாழ். கொக்குவில் மேற்கு மச்சவனப் பகுதியைப் (இராமுப்பிள்ளை வீதி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு சண்முகராசா அவர்கள் 06-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு திருநாவுக்கரசு - தங்கரத்தினம் தம்பதியினரின் மூத்த மகனும்,
பொன்னுத்துரை - முத்துரத்தினம் அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவமலர்தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரூபிகா (ஆசிரியை - கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயம்), அமுதினி (யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசீலன் (மாகாண காணி ஆணையாளர் அலுவலகம்), பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணிதேவி, ராதா, தவராசா (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் - பிரதேச சபை), புஸ்பராஜா, லிங்கராசா, காலஞ்சென்ற தனராசா, தனவதி, இன்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜானன், சைதன்யா, பவித்திரா, மித்திரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

