திரு. தியாகராசா பிரேமகாந்தன்(பிறேமன்)

(ஆசிரியர் - கிளி.முரசுமோட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை)

தியாகராசா பிரேமகாந்தன்(பிறேமன்)

மறைவு: 05 நவம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல.674, 7ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சியை வதிவிடமாகவும், தற்போது தசரதன், சோரன்பற்று மாஞ்சோலை முருகன் கோவிலடி பளையில் வசித்து வந்தவருமான திரு. தியாகராசா பிரேமகாந்தன்  அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா (ஓய்வுநிலை அதிபர் - யா. புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்) - தங்கம்மா (ஓய்வுநிலை அதிபர் - கிளி. இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயம் ) தம்பதியினரின் அன்பு புதல்வனும், 

செல்வராசா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஷஜனி (ஆசிரியை - கிளி. மாசார் அ.த.க. பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,

கவிநயன் அவர்களின் அன்புத்தந்தையும்,

கலையரசி (ஓய்வுநிலை பிரதி அதிபர் - கிளி. மத்திய ஆரம்ப வித்தியாலயம்), காலஞ்சென்ற பத்மகாந்தன் (சுவிஸ்), காலஞ்சென்ற கலைச்செல்வி (கனடா), கலைவதனி (கனடா), ஆகியயோரின் அன்பு சககோதரனும்,

காலஞ்சென்ற செல்வராசா (ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் - கிளிநொச்சி கல்வி வலயம்), ஜெயகெளரி (லதா-சுவிஸ்), லோகநாதன் (கனடா), தர்மராசா (பொறியியலாளர்-கனடா), வினோத், ஜனனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பளை மாசாரிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இராமநாதபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2025 03:29)