திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)

உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)

தோற்றம்: 02 அக்டோபர் 1952 - மறைவு: 09 பெப்ரவரி 2025

யாழ். திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார், உமாபதி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.

காலஞ்சென்ற சிவராசா, குணபாலசிங்கம் (குருவி - இந்தியா), அருந்தவச்செல்வம் (ரஞ்சிதம்), இந்திராதேவி (இந்தியா), சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, அருணாச்சலம், சிவானந்தம் மற்றும் இரத்தினவடிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நீர்வளைப் பிள்ளையார் கோயிலடியுலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2025 05:00)