வைத்திய கலாநிதி. வெங்கடாசலம் சுதர்சன்
(யாழ் வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர்)
தோற்றம்: 06 ஜனவரி 1976 - மறைவு: 15 ஆகஸ்ட் 2025
யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஞானவைரவர் வீதி, கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வைத்திய கலாநிதி. வெங்கடாசலம் சுதர்சன் அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வெங்கடாசலம் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலநாதன் - மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காயத்ரி அவர்களின் அன்புக் கணவரும்,
சேந்தனா, ஜனந்தனன், தனுஜனன் ஆகியோரின் பாசமிக்கதந்தையும்,
திவாகர், செந்தூரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
திர்சான், பிரபாஜினி, சுபத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
