திரு. வல்லிபுரம் சின்னத்துரை
தோற்றம்: 24 ஆகஸ்ட் 1942 - மறைவு: 06 அக்டோபர் 2024
யாழ். கந்தரோடை மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், புகையிரத வீதி சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சின்னத்துரை அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வல்லிபுரம்-பாறுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், கைலாயர்-முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காந்தரூபன் (இலண்டன்), காலஞ்சென்ற பத்மரூபன், நிரஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதியழகன் (ஆசிரியர்-யாழ் ஸ்கந்தவரோதய கல்லூரி), துஷிக்கா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக் மாமனாரும்,
மாதுளா, கயூரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் (நடேசு), ராசா, ராசலக்சுமி மற்றும் துரைராஜா, தனபாலசிங்கம், திலகவதி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2024 செவ்வாய்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
