திரு. வல்லிபுரம் யோகராஜா

வல்லிபுரம் யோகராஜா

தோற்றம்: 11 ஏப்ரல் 1960 - மறைவு: 31 ஜூலை 2024

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்லிபுரம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

குமாரசாமி-சரஸ்வதி தம்பதியினரன் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசையா (கனடா), மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, தங்கராசா, மற்றும் யோகேஸ்வரி (கனடா), இராஜேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விவேகானந்தன் (பாபு-சுவிஸ்), தனவேந்தன் (வேந்தன்-கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கௌசல்யா (கௌசி-கனடா), தீபாகரன் (தீபன்-கனடா), தமிழ்வாணி (வாணி-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுசுயா (சுவிஸ்), நிஷாந்தினி (நிஷா-இலங்கை), நாகேந்திரன் (இந்திரன்-சுவிஸ்), கோபிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அட்சிகா, பகலவன், சுகிதன், சாயிசன், அகரன், சாகித்யா, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணி முதல் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 2.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2024 04:00)