திரு. வேலுப்பிள்ளை மார்க்கண்டு

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

வேலுப்பிள்ளை மார்க்கண்டு

தோற்றம்: 05 ஜனவரி 1928 - மறைவு: 27 ஏப்ரல் 2024

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதி காங்கேசன்துறை, கனடா, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (ஆசிரியர்), இராசதுரை (ஓய்வுபெற்ற நுவரெலியா அரசாங்க அதிபர் தங்கத்துரை, ஓய்வு பெற்ற லிகிதர்), மற்றும் திலகவதி கந்தசாமியின் அன்புச் சகோதரனும்,

சோதிமயில் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- கனடா) அன்புக் கணவரும்,

ஶ்ரீதரன் (உரும்பிராய்), நிர்மலன் (கனடா), முரளிதரன் (கனடா), பகீரதன் (நோர்வே), சோபனா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெளரி மனோகரி (ஓய்வுபெற்ற ஆசிரியர் - வசாவிளான் மத்திய கல்லூரி), சாருசுகுணா, ஜெயந்தினி, அமிர்தினி, ஶ்ரீதர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண்யன், பிருந்தினி, தனஞ்சயன் - பானுமதி (ஐக்கிய இராச்சியம்), காருண்யன், நிவேதிகா, புருஷோத், பிரவீன் (கனடா), ஜென்னி, ஜெசிக்கா (கனடா), சஞ்சய், ஸ்ரீ (ஐக்கிய அமெரிக்கா), ரிதன், கவின்( நோர்வே) ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் சைவசமய முறைப்படி, 30- 04- 2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, ஏழாலை கடா கரம்பன் மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2024 04:00)