திரு. வேலுப்பிள்ளை நடராசா
மறைவு: 16 டிசம்பர் 2025
யாழ். காரைநகர் சத்திரந்தை களபூமியைப் பிறப்பிடமாகவும், மில் வீதி இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கல்லூரி வீதி நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை - பூரணம் தம்பதியினனின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தேவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், அன்னம்மா, மகேஷ்வரி மற்றும் தர்மகுலசிங்கம், தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன் (அதிபர் - யாழ். அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயம், கணித ஆசான் றோயல் அக்கடமி, சோதிநாதன் (மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சசிகலா, புஷ்பராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ,
லக்சிகா (யாழ் மருத்துவப்பீடம், தர்சிகா, சாம்பவி, பவனிகா, யதுர்சன், மதுஷன், விராஹன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
