திருமதி. விஜயா மனோகரன்

(கொழும்பு இந்துக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியை)

விஜயா மனோகரன்

தோற்றம்: 15 ஜனவரி 1973 - மறைவு: 05 அக்டோபர் 2021

காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும்,கொழும்பு தெகிவளை களுபோவிலயை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி விஜயா மனோகரன் அவர்கள் 05-10-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை இன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினம்,தேவராணி (பூரணம்) அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் செல்வராணி  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவப்பிரகாசம் மனோகரன் (My Communication, போதிருக்காராம வீதி) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வன் நரேஸ், டானிஷன் (கொழும்பு இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

சதானாந்தம் (Australia) அவர்களின் அன்புச்சகோதரியும்,
 
காலஞ்சென்ற சந்திரகுமார், கருனாகரன், யோகேஸ்வரன், பாஸ்கரன், காலஞ்சென்ற வரேந்திரன், விஜிதா (Australia) ஆகியோரின் மைத்துனியும்,
 
திவியேஷ், ஹரிஸ், நிதுஷா ஆகியோரின் அன்பு மாமியும்,
 
தனலட்சுமி, கனகாம்பிகை, அருட்செல்வி ஆகியோரின் சகலியும்  ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் இன்று 06-10-2021ம் திகதி புதன்கிழமை  காலை 10.00 மணி தோடக்கம் மாலை 5.00 மணிவரை அஞ்சலிக்காக மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 07-10-2021ம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி  தகனக்கிரியைகளுக்காக 9.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-
 
இல.10/5, பாத்தியா  மாவத்தை,களுபோவில,தெஹிவளை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2021 15:31)