பிரம்ம ஶ்ரீ. பிரம்மஸ்ரீ விஸ்வநாராயண சர்மா (விஸ்வநாத ஐயர் சோமசுந்தர ஐயர்)
(வேதாகம வித்யாபூஷணம்)
தோற்றம்: 23 நவம்பர் 1946 - மறைவு: 06 டிசம்பர் 2024
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேதாகம வித்யாபூஷணம் பிரம்மஸ்ரீ விஸ்வநாராயண சர்மா அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் புகழுடல் 07-12-2024 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை மஹிந்த மலர்ச்சாலை கல்கிசையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் பூதவுடல் அன்னாரின் பிறப்பிடமாகிய தெல்லிப்பழைக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை அன்னாரின் இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கட்டு பெட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
