திருமதி. யோகராணி விஸ்வநாதன்

யோகராணி விஸ்வநாதன்

தோற்றம்: 25 நவம்பர் 1950 - மறைவு: 26 டிசம்பர் 2024

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராணி விஸ்வநாதன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஒட்டோஸ் மணியம்) - கமலாம்பிகை தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மாமடு மணியம்) - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்

விஸ்வநாதன் (நில அளவையாளர் - சவூதி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷிராணி (ஆசிரியை - வ/பெரிய கோமரசன்குளம் ம.வி), தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசரூபன் (பொறியியலாளர் - கொழும்பு) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

மித்ரா (வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் தரம் -7 மாணவி) அவர்களின் ஆசை அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவ ஈஸ்வரி (பேபி), சந்திர லீலா (பபா - ஆங்கில ஆசிரியை) மற்றும் கதிர்காம தேவி (குஞ்சு - ஆசிரியை), மகாலக்‌ஷ்மி (ராசு-ஜேர்மனி), ரவிச்சந்திரா (சூட்டி-இலண்டன்), காலஞ்சென்ற ரட்ணேஸ்வரன் (மின்சார சபை Foreman) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், சிவபாலன் (ஆங்கில ஆசிரியர்) மற்றும் சிவானந்தன் (இலண்டன்), சிவாம்பிகை (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வௌிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2024 05:00)