திருமதி. யோகராசா இந்திராணி (இந்திரா)

(ஓய்வு நிலை ஆசிரியை)

யோகராசா இந்திராணி (இந்திரா)

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1955 - மறைவு: 02 மே 2026

யாழ், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் ,வாழ்விடமாகவும் கொண்ட.  திருமதி.  யோகராசா இந்திராணி (இந்திரா) (ஓய்வு நிலை ஆசிரியை) அவர்கள் 02/05/26  சனிக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

யோகராசாவின் அன்பு மனைவியும்,
 
ஶ்ரீபிரணவனின் பாசமிகு தாயாரும்,
 
கமலராணி, செல்வமுத்து, வைகுந்தராணி, அம்பலவாணர் (நாதன் - முன்னைநாள் போசகர் ஆவரங்கால் ஒன்றியம், பிரித்தானியா), கோணேஸ்வரன் மற்றும் காலஞ்சென்ற தயாபரன் (தயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஸ்ரீரங்கநாதன், யோகராசா, ராகினி, ராஜகமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
நீதன், விநோதன், கஜிதன் ஆகியோரின் அன்புசு சித்தியும்,
 
விஷ்ணுகிரி, விஷ்ணுகாந்தன், ஜகயாழினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
 
ராஷி, வதுசா, பிரியங்கன்,  கதிர்கண்ணன், கதிர்பிரசுதன், ஆகியோரின் அன்பு அத்தையும்,
 
நிஷ்கலநினி, லக்சி ஆகியோரின் மாமியாரும்,
 
துதியன், இந்துஜன், டியா, அபிஷன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 10-05-2026ம் திகதி ஞாயிஅற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் ஆவரங்கால் மேற்கு வன்னியசிங்கம் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு 
எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். 



் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 01:05)