திருமதி. யோகேஸ்வரி அருளானந்தம் (ஆச்சி)
தோற்றம்: 26 டிசம்பர் 1968 - மறைவு: 18 ஜூன் 2024
யாழ். காரைநகர் கருங்காலி வேரக்குளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா-பூபதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
செல்லையா அருளானந்தம் (அருள்- வருமான வரி, சுங்க திணைக்கள அலுவலகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாருகா ,அருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கர் அவர்களின் மாமியாரும்,
உமாமகேஸ்வரன்-செல்வராணி தம்பதியினரின் சம்பந்தியும்,
தனலெட்சுமி, சுந்தரசிவம், ஜெகரட்ணம் (சீசீ), யோகேஸ்வரன், புஸ்பராணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 19-06-2024 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-06-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
