செல்வி. யோகேஸ்வரிதேவி துரைராசா
(ஓய்வுபெற்ற கதிர் இயக்கவியலாளர்- பொது வைத்தியசாலை வவுனியா)
தோற்றம்: 03 மே 1950 - மறைவு: 08 ஜூலை 2021
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரிதேவி துரைராசா அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரிதேவி, ஸ்ரீதேவி மற்றும் ஈஸ்வரிதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை- வவுனியா மத்திய மகா வித்தியாலயம்), பரமேஸ்வரன் (ஓய்வுபெற்ற வனவள உத்தியோகத்தர்- வவுனியா), சுசிலாதேவி (லண்டன்), காலஞ்சென்ற யோகேஸ்வரன் (ஜேர்மனி), பாபுதுரையப்பா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பொன்னம்பலநாதன், காலஞ்சென்ற வாமதேவன், சிவராசா (கனடா), தவமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை- வவுனியா மத்திய மகா வித்தியாலயம்), ரவிச்சந்திரா(லண்டன்), நந்தினி(ஜேர்மனி), தமிழரசி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலானி(நீதிமன்றம்- சாவகச்சேரி), கிருபாகரன் (கனடா), பிறேமா (லண்டன்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
ஜதர்ணி (ஆசிரியை- கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி), துஷாரன் (வைத்தியர்- வவுனியா பொது வைத்தியசாலை), நிலக்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
வைஷ்ணவி(ஆசிரியை- வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலயம்), பானு புருஷோத்தமி (ஆசிரியை- வவுனியா மகா வித்தியாலயம்), ராகவீணா (ஜேர்மனி), சேந்தினி மதுஷினி, கரிஸ்ராஜ் (கனடா) ஆகியோரின் சின்ன மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
